ஜேர்மனியில் காவலராக ஊடுருவ முயன்ற 23 வயது பயங்கரவாத சந்தேக நபர் கைது
யூரோ 2024 கால்பந்து தொடரில் பாதுகாப்புக் காவலராக பணிக்கு விண்ணப்பித்த, 23 வயது இளைஞரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபராக ஜேர்மனி பொலிஸார் கைது செய்தனர்.
யூரோ 2024
ஜேர்மனியில் யூரோ 2024 கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இதற்காக மைதானங்கள், அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 23 வயது இளைஞர் ஒருவர் பாதுகாப்பு காவலர் பணிக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர் யூரோ 2024 கால்பந்து போட்டியில் பாதுகாப்பு காவலராக ஊடுருவ முயன்றதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சௌஃபியன் டி எனும் பெயரிடப்பட்ட அந்த இளைஞரை ஐ.எஸ்.ஐ.ஸ் சந்தேக நபர், ஜேர்மனியில் ஒரு மைதானத்திற்கு வெளியே 'பக்க நிகழ்வுகளில்' பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
தரவு சேமிப்பு சாதனங்கள்
அவர் தனது தாய், சகோதரியுடன் கைது செய்யப்பட்ட நிலையில் மொபைல் போன்கள் மற்றும் 2500 யூரோ ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. மேலும், கடந்த மாதம் இஸ்தான்புல்லுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த அவர், பயங்கரவாத சதித்திட்டங்களில் ஈடுபட்ட சந்தேகத்தை தூண்டினார்.
அத்துடன் சௌஃபியனின் குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டதில் தொலைபேசிகள் மற்றும் கணினிகளுடன் தரவு சேமிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் ஜேர்மனியின் ஃபெடரல் நீதிமன்றத்தின் விசாரணை நீதிபதியின் முன் சௌஃபியனின் தாய் ஆஜரானார். அவர் தாங்கள் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதாகவும், சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு பயணத்தைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |