குஜராத்தில் 14 வயது மாணவனால் கர்ப்பமான 23 வயது ஆசிரியை
இந்திய மாநிலம் குஜராத்தில் பயிற்சி ஆசிரியை ஒருவர், 14 வயது மாணவரால் கர்ப்பமானது பரபரப்பை ஏற்படுத்தியது.
டியூசன் ஆசிரியை
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் பாடசாலை மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
அவரிடம் 14 வயது மாணவர் ஒருவர் டியூசன் படிக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கும் ஆசிரியைக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருவரும் கடந்த மாதம் 25ஆம் திகதி மாயமாகினர். இதனால் மாணவனின் பெற்றோர் பொலிஸிடம் புகார் அளித்தனர்.
டிஎன்ஏ பரிசோதனை
இதனைத் தொடர்ந்து குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் ஆசிரியையும், மாணவரும் பிடிபட்டனர். அப்போது ஆசிரியை கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
பின்னர் அவர் மீது போக்ஸோ வழக்கை பதிவு செய்த பொலிஸார் காவலில் வைத்தனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையில் உள்ளது என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |