லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கிய 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள்
வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.
தென் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த கண்டெய்னர் ஒன்றில் 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
துறைமுகம் ஒன்றில் சிக்கிய போதைப்பொருள்
இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள London Gateway துறைமுகத்திற்கு தென் அமெரிக்காவிலிருந்து கண்டெய்னர் ஒன்று வந்துள்ளது.

அதில் வாழைப்பழங்கள் அடங்கிய பெட்டிகள் இருந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டுள்ளார்கள்.
அப்போது, அந்த பெட்டிகளிலிருந்த வாழைப்பழங்களின் இடையே போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த கண்டெய்னரில், 2,900 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

232 மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 1,04,69,60,08,800.00 ரூபாய் ஆகும்.
அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்த போதைக்கடத்தல் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |