உலகின் பணக்கார நாடொன்றில் வறுமையின் அபாயத்தில் 25 சதவிகித மக்கள்
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்திலேயே 25 சதவிகித மக்கள் வறுமையின் அபாயத்தில் வாழ்கிறார்கள் என்கிறது அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம்.
வறுமையின் அபாயத்தில் 25 சதவிகித மக்கள்
மேலும், சுவிட்சர்லாந்தில் 8 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்களாம்.
அதாவது, தனிநபர் ஒருவரின் மாதந்திர வருவாய், 2,315 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் குறைவு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதந்திர வருவாய் 4,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் குறைவு.
இவர்களில் பலர், தங்களால் மாதத்தில் ஒருமுறை கூட தங்கள் குடும்பத்துடன் வெளியே சாப்பிடச் செல்லமுடியவில்லை என்று கூறுகிறார்கள்.
இவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இளைஞர்கள். பள்ளியில் படிப்பவர்களில் 14 சதவிகிதம் பேர், தங்கள் எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |