அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: 25 ஜனநாயக கட்சி மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 60 வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த இந்த புதிய வர்த்தக வரியை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.
டிரம்பின் நடுவண் அரசு இந்த வர்த்தக நடவடிக்கையில் நிர்வாக அதிகார வரம்பை மீறி இருப்பதாக மாநிலங்களின் கூட்டணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த வழக்கானது அமெரிக்காவின் பன்னாட்டு வர்த்தக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வழக்கு மனுவில், வரி எவ்வாறு உருவாக்கப்பட்டது மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, புதிய வர்த்தக வரியை விதிப்பதற்கு முன்னதாக நாடுகள் வாரியான விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெவ்வேறு கொள்கைகளை கொண்ட நாடுகளுக்கு ஒரே மாதிரியான வரி விதிப்பு என்பதற்கான தகுந்த நியாயங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் வர்த்தக நீதிமன்றம் நிராகரித்த வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1974ம் ஆண்டின் வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐ மத்திய நிர்வாகம் முறையற்ற முறையில் பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற மனுவின் முக்கிய நோக்கமாக, சர்ச்சைக்குரிய வர்த்தக வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |