சுவிஸ்நாட்டில் இயங்கும் 25 அரச நிறுவனங்களும் ஒரே நேரத்தில் வருகை தருகை தரும் நிகழ்வு!
அனைத்து மக்களுக்குமான வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக சுவிஸ்நாட்டில் இயங்கும் 25 அரச நிறுவனங்களும் ஒரே நேரத்தில் வருகை தருகிறார்கள்.
03.09.2022 அன்று எதிர்வரும சனிக்கிழமை பிற்பகல் 14 மணி தொடக்கம் மாலை 17.30 மணிவரை.
Reformierte Kirchgemeinde மற்றும் Bethlehem, Eymattstrasse 2b,3027 Bern என்னும் இடத்தில் இந் நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
Bern நகரப்பகுதியில் கடமையாற்றும் சமூகசேவையாளர்களாகிய நாங்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளோம்.
Bern நகரப்பகுதியில் வாழும் 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இதில் பங்குகொள்கின்றார்கள். ஒவ்வொரு நாட்டுமக்களுக்கும் ஒருவர் அல்லது இருவர் பொறுப்பாக உள்ளார்கள்.
உங்களது பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருக்கின்றன.உங்களுக்கான சிற்றுண்டிகளும், தேநீர், கோப்பி போன்ற சூடான பானங்களும், குளிர்பானங்களும் வழங்கப்படும்.
உங்களது வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களை எடுத்துக்காட்டாக நிதிப்பிரச்சனை, வேலைஇழப்புப் பிரச்சனை, மொழியைக் கற்றுக்கொள்ளும் வழிகள், வளர்ந்தோருக்கான கல்வி போன்ற பல வினாக்களுக்கு விடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
எனவே தமிழ் மக்களாகிய நாமும் இவ் நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு பயனைப்பெற்றுக்கொள்ளுமாறு பேர்ண் மேற்குப்பகுதியின் சமூக சேவையாளர்கள் சார்பாக்க் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் மக்களுக்குப் பொறுப்பாக இணையர் நந்தினி முருகவேள் அவர்கள் கடமையாற்றுகின்றார்.