கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல்..புதிதாக BSNL வாங்கிய 25 லட்சம் பேர்
செல்போன் வாடிக்கையாளர்கள் பலர் BSNL நிறுவனத்தின் சிம்கார்டுக்கு மாறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சேவை கட்டண உயர்வு
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை அதிகளவில் உயர்த்தின.
இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பலரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனியார் நிறுவனங்களின் இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் பலரை வேறு சேவை நிறுவனத்திற்கு மாற தூண்டியுள்ளது. குறைந்த விலையில் சேவையை வழங்கும் BSNL சமீபத்தில் 4G சேவைக்கு மாறியது.
BSNL சிம்கார்டு
இந்த நிலையில், சுமார் 2.50 லட்சம் பேர் தங்கள் எண்களை BSNL சிம்கார்டுக்கு மாறியுள்ளனர்.
அதேபோல் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம்கார்டுகள் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணம் ரூ.199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், BSNL ரூ.108க்கு அந்த சேவையை வழங்குகிறது என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |