பிரித்தானியாவில் 25 வயது பெண்.,குடியிருப்பில் இருந்து விழுந்து மரணம்: மர்ம ஆணை தேடும் பொலிஸார்
இங்கிலாந்தின் சௌதம்ப்டனில் 25 வயது பெண்ணொருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் விசாரணைகளை தூண்டியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இறப்பு
வியாழக்கிழமை அன்று, சௌதம்ப்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவரை விழுந்ததாக அவரச சேவைகளுக்கு அழைப்பு சென்றுள்ளது.
இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் 25 வயது இளம்பெண் என்று பின்னர் தெரிய வந்தது. அவர் விழுந்த முகவரியில் ஆண் ஒருவர் இருந்ததாக நம்பும் பொலிஸார், அவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
தேடும் பொலிஸார்
மேலும், ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் Cuckmere Laneயில் தங்கி, சுற்றியுள்ள பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் வைட் காவல் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு ஆணை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அதிகாரிகளால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |