இரண்டு நாட்களில் திருமண நிச்சயம்..25 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கதறும் குடும்பம்
தமிழக மாவட்டம் அரியலூரில் 25 வயது பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
திருமண நிச்சயதார்த்தம்
அரியலூரின் சன்னவூர் மேலத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர்.
25 வயதான இவர், திருமனூரில் அஞ்சலக ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 
இவருக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஜெனிபர் அஞ்சலகத்திற்கு சென்றுள்ளார்.
பரிதாபமாக உயிரிழப்பு
அப்போது வேகமாக வந்த வேன் ஒன்று அவரது வாகனத்தின் மீது மோத, ஜெனிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெனிபரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |