உன் வீட்டுக்குள் நுழைந்து துஷ்பிரயோகம் செய்வேன்! லண்டனில் பெண்ணை மிரட்டிய 25 வயது இளைஞன்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
லண்டனில் சாலையில் சென்ற பெண்ணை அவதூறான வார்த்தைகளால் திட்டி அவரை துஷ்பிரயோகம் செய்வேன் என மிரட்டிய இளைஞன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தெற்கு லண்டனை சேர்ந்தவர் மார்க் ரோனல்ட்சன் (25). இவர் கடந்த ஜனவரி 25ஆம் திகதி சாலையில் சென்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்தார். இதையடுத்து என்னை ஏன் பின் தொடர்கிறாய் என அப்பெண் கேட்ட நிலையில் அவரை அவதூறான மற்றும் மோசமான வார்த்தைகளால் மார்க் திட்டினார்.
மேலும் உன் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து துஷ்பிரயோகம் செய்வேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
இதே போல கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி மற்றும் 21ஆம் திகதி அப்பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் தான் அவதூறாக அப்பெண்ணை திட்டுவதை தானே வீடியோவாக மார்க் எடுத்திருக்கிறார்.
அப்போது அப்பெண்ணும் மார்க்கை புகைப்படம் எடுத்து இது குறித்து பொலிசில் புகார் கொடுத்தார்.
புகாரையடுத்து பொலிசார் மார்க்கை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஆறு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் டிடெக்டிவ் கான்ஸ்டபிள் ரிச்சர்ட் கூறுகையில், இது போன்ற பிரச்சினைகளை சந்திப்பவர்கள் உடனடியாக பொலிசில் புகார் அளிக்க வேண்டும்.
இந்த மோசமான நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாதது, அது ஒரு கிரிமினல் குற்றம் என கூறியுள்ளார்.