வேல்ஸில் 25 வயது இளைஞர் திடீர் மரணம்: மூவர் கைது
வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவசர சேவைக் குழுவினர்
வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்மேனாவ் பண்ணையில், மருத்துவ அவசரநிலை குறித்த தகவல் கிடைத்துள்ளது. உடனே அவசர சேவைக் குழுவினர் அங்கு விரைந்தனர்.
அப்போது, Royal Welsh Show மைதானத்திற்கு அருகில் உள்ள முகாம் தளம் ஒன்றில், 25 வயது இளைஞர் ஒருவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
மருத்துவக் குழுவினர் அவரை காப்பாற்ற முயற்சித்தது பலனளிக்கவில்லை. குறித்த இளைஞர் இறந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
பின்னர் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |