இளவரசி கேட்டிடமிருந்து மகளுக்கு கிடைக்கவிருக்கும் 250,000 பவுண்டுகள் மதிப்புடைய சொத்து
இளவரசி கேட் போன்றதொரு தாய்க்கு மகளாக பிறந்தது குட்டி இளவரசி சார்லட்டுக்கு அதிர்ஷ்டம்தான்.
ஆம், தாத்தா பாட்டி மற்றும் பெற்றோரிடமிருந்து குட்டி இளவரசர்களுக்கு என்னென்னவோ சொத்துக்கள் கிடைக்கவிருக்கின்றன.
குறிப்பாக, சார்லட்டுக்கு தன் தாயிடமிருந்து 250,000 பவுண்டுகள் மதிப்புடைய சொத்து ஒன்று கிடைக்க இருக்கிறது.
இளவரசிகளுக்கும் ராணிக்கும் கைப்பை எதற்கு?
மகாராணிகளானாலும் சரி, இளவரசிகளானாலும் சரி, அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கையில் சிறு கைப்பை ஒன்றை வைத்திருப்பதைக் காணலாம்.
அவர்கள் ஒன்றும் வெளியே செல்லும்போது கையில் பணத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை.
அப்படியிருந்தும், மறைந்த எலிசபெத் மகாராணியானாலும் சரி, இளவரசி டயானாவும் சரி, இளவரசி கேட்டும் சரி, கையில் ஒரு கைப்பையை வைத்திருப்பார்கள்.
இளவரசி டயானா, 5,300 பவுண்டுகள் மதிப்புடைய ஒரு ஆடம்பர டிசைனர் கைப்பையை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பார்.
மகாராணியார் தன் கையில் பை ஒன்றை வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. அதாவது, அவர் தன் பையை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றினால், அவர் உரையாடலை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்று அர்த்தம் என்கிறார் ராஜ குடும்ப வரலாற்றாளரான Hugo Vickers என்பவர்.
அதேபோல, இளவரசி கேட் தன் இரு கைகளாலும் தன் கைப்பையை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார் என்றால், அவர் தன் எதிரே இருப்பவருடன் கைகுலுக்க விரும்பவில்லை, அது தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்ககூடும் என்று அர்த்தம் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Myka Meier என்பவர்.
குட்டி இளவரசிக்கு கிடைக்கவிருக்கும் சொத்து
இளவரசி டயானா, தன் விருப்பங்களை ஒரு கடிதத்தில் எழுதி வைத்திருந்தார்.
அதில், தனது நகைகள் மற்றும் அவருக்கு சொந்தமான பொருட்களில் முக்கால் பங்கை தன் பிள்ளைகளான வில்லியமுக்கும் ஹரிக்கும் கொடுக்கவேண்டும் என்றும், மீதமுள்ள கால் பங்கை தனது ஞானக்குழந்தைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல, இளவரசி கேட் தனது மகளுக்கு தன் பைகளைக் கொடுப்பாரென்றால், குட்டி இளவரசிக்கு 250,000 பவுண்டுகள் மதிப்புள்ள கைப்பைகள் கிடைக்கும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |