எதிரிகளை தாக்க ரூ.2,500 கோடியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்.., ஒப்புதல் அளித்த இந்திய அரசு
ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்
உலக நாடுகளின் போர் தாக்குதலில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆளில்லா சாதனைங்களை உருவாக்க இந்திய கடற்படை முயற்சி செய்து வருகிறது.
அந்தவகையில், ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த கப்பலானது Extra large பிரிவில் 100 டன் எடைக்கு மேல் இருக்கும். இந்த கப்பலின் மூலம் நீருக்கு அடியில் இருக்கும் எதிரிகளின் கப்பல் மீது தாக்குதல் நடத்த முடியும்.
அதுமட்டுமல்லாமல், கடலின் மேற்பரப்பில் இருக்கும் கப்பலை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியும்.
இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என்று முன்னாள் கடற்படை துணை தலைமை வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட் கூறியுள்ளார்.
மேலும், கண்ணி வெடிகள் இடுதல் மற்றும் கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்கு இந்த கப்பலை பயன்படுத்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்துக்கான டெண்டர், அடுத்த சில மாதங்களில் இந்திய கடற்படை வெளியிடும் என்று தெரிகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |