சூடானில் இருந்து இதுவரை 257 தமிழர்கள் மீட்பு
சூடானிலிருந்து இதுவரை 257 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆப்ரேஷன் காவேரி
சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆப்ரேஷன் காவேரி (Operation Kaveri) திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் 3000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளார்.
257 தமிழர்கள்
அதில், 257 பேர் தமிழர்கள் ஆவர். அவர்களில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தனர். மதுரை, கோயம்புத்தூர், சென்னை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சூடானில்லிருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இதுகுறித்து, வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ''இதுவரை தமிழகத்தை சேர்ந்த 257 பேரை, மத்திய அரசின் உதவியுடன், தமிழக அரசு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக செய்தூதரப்படும்" அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்தார்.
அதேநேரத்தில் ஆப்ரேஷன் காவேரி திட்டம் மூலம் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.