நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ்" அறிமுக நிகழ்வும், மருத்துவர்களுடனான கலந்துரையாடலும்
சுவிஸ்லாந்தில் ஜெனிவா மாநிலத்தில் "நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ்" அறிமுக நிகழ்வும், மருத்துவர்களுடனான கலந்துரையாடலும் 4.6.23 அன்று நடைபெற்றது. எழுத்தாளரும் சஞ்சிகை ஆசிரியையுமான திருமதி மிதயா கானவி தலைமையில் பி. ப 04.10 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகியது.
மங்கல விளக்கினை ஜெனிவா தமிழ்ப்பாடசாலை முதல்வர் திரு பார்த்தீபன், தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக திரு சிறி, ஜெனிவா கலாச்சார ஒன்றியம் சார்பாக திருமதி தமயந்தி மற்றும் திருமதி சரோஜினி தேவி அம்மா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து
வரவேற்புரையினை நலவாழ்வு நிறுவனத்தின் ஆரம்ப உறுப்பினரும் பேண் மாநிலத்தில் பணியாற்றும் சித்த - ஆயுள்வேத வைத்தியருமான Dr. இளங்கோ ஏரம்பமூர்த்தி அவர்கள் வழங்கினார்.
நூல் அறிமுக உரையினை சஞ்சிகை ஆசிரியை வழங்க, "நலவாழ்வு நிறுவனமும் அதன் பணிகளும்" என்ற தலைப்பில் நலவாழ்வு நிறுவனத்தின் செயளாரும் பேண் மாநிலத்தில் பணியாற்றும் மனநல வைத்திய நிபுணர் Dr. விஜயதீபன் பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கினார்.
சித்தவைத்தியர் Dr. இளங்கோ அவர்கள் சிறப்பிதழினை வெளியீட்டு வைக்க ஜெனிவாவில் பல் மருத்துவராக பணியாற்றும் Dr. டிலாணி - பிரவு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜெனிவா ஈழநட்சத்திர விளையாட்டு கழகம், ஜெனிவா தமிழ்ச்சங்கம், இளையோர் அமைப்பு, ஜெனிவா கலை கலாச்சார சங்கம், கிறிஸ்தவ ஒன்றியம் சமூக ஆர்வலர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நூல்களை பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து, சிறப்புரையினை ஜெனிவா தமிழ்ப்பள்ளியின் முதல்வராக இருக்கும் திரு பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். நலவாழ்வு நிறுவணத்தில் தமிழ் வைத்திய நிபுணர்கள் ஒருங்கிணைந்த சேவைகளை சரியாக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்
சிறப்பு நிகழ்வாக சித்தவைத்தியர்
Dr. இளங்கோ அவர்களின், மூச்சு பயிற்சியும் அதன் செயன்முறை விளக்கங்களும் நடைபெற்றது.
கேள்வி நேரத்தின் போது, நிகழ்வில் கலந்து கொண்டவர்களால், நோய்கள் மற்றும் அதற்கான மருத்துவ சேவைகள் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் பதில் வழங்கினார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மொழிபெயர்ப்பாளர் திருமதி ரஜனி அவர்கள், இந்நிகழ்வு பற்றிய பாராட்டுக்களையும் ஆக்கபூர்வமான பல கருத்துக்களையும் வழங்கினார். அதே போல் சமூக ஆர்வலர்கள் பலரது கருத்துகளும் பதிவாகியது.
இறுதியாக, மாலை 6.48 மணிக்கு சஞ்சிகை ஆசிரியையின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
மருத்துவ சஞ்சிகை அறிமுக நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்து பயன் பெற்றார்கள்.