பிரான்சால் மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரில் 26 பேர் மாயம்
மத்தியதரைக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு இத்தாலி இடமளிக்க மறுத்ததால் அவர்களை பிரான்சுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
26 பேர் மாயம்
அப்படி பிரான்சுக்குக் கொண்டவரப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் வயதுவராத 44 பேரும் அடக்கம்.
அந்த சிறுவர்களில் 26 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்சுக்குக் கொண்டு வரப்பட்ட உடனேயே மூன்று பிள்ளைகள் ஓடிவிட்டார்கள் என்று கூறிய அவர், வியாழக்கிழமை காலை மேலும் 23 பிள்ளைகள் மாயமாகிவிட்டார்கள் என்றார்.
Copyright VINCENZO CIRCOSTA / AFP
இது எதிர்பார்த்த ஒன்றுதான்
இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார் Var பகுதியிலமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை தங்கவைக்கும் மையத்தின் இணை இயக்குநரான Christophe Paquette.
மாயமானவர்களில் பெரும்பான்மையோர் எரித்ரிய நாட்டவர்கள் என்று கூறும் அவர், அவர்களுடைய குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஏற்கனவே நெதர்லாந்து, லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து அல்லது ஜேர்மனியில் வாழ்கிறார்கள். அவர்களுடன் சென்று இணைந்துகொள்வதுதான் இவர்களுடைய இலக்கு என்கிறார்.