கேரளாவில் பறவைக்காய்ச்சல்: 26,000 பறவைகளைக் கொல்ல முடிவு
Bird flu detected in two Alappuzha farms; 26,000 birds to be culled: கேரளாவிலுள்ள ஆலப்புழா என்னுமிடத்தில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 26,000 பறவைகளைக் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள இரண்டு பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 26,000 பறவைகளைக் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
26,000 பறவைகளைக் கொல்ல முடிவு

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள இரண்டு பண்ணைகளிலுள்ள பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு பண்ணையில் கோழிகளுக்கும், காடைகளுக்கும், மற்றொரு பண்ணையில் கோழிகளுக்கும் வாத்துகளுக்கும் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பறவைக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக சுமார் 26,000 பறவைகளைக் கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
பறவைகளைக் கொல்லும் பணி நாளை துவக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.