ஜேர்மன் தலைநகரில் 200 விமானங்கள் ரத்து: 27,000 பயணிகள் பாதிப்பு
ஜேர்மன் தலைநகரமான பெர்லின் உட்பட சில நகரங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரணம் இதுதான்
ஜேர்மன் விமான நிலையங்கள் சிலவற்றில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வேலை செய்வதற்கு ஊதியம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஜேர்மன் தலைநகரமான பெர்லினில் மட்டும் 200 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், சுமார் 27,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுபோக, Bremen மற்றும் Hamburg விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள். Hamburgஐப் பொருத்தவரை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும், விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பாதியும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அந்நகர விமான நிலையம் தெரிவித்துள்ளது.
Bremen விமான நிலையத்திலோ எந்த விமானமும் புறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் வேலைநிறுத்தத்தால் சுமார் 45,000 பயணிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் விமானநிலையங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Image: Christian Mang/REUTERS

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.