முகமூடி கும்பல் நடத்திய தாக்குதல்: பிரித்தானியாவில் 27 வயது இளைஞர் பலி
27 years old man killed in north manchester: பிரித்தானியாவில் 27 வயது இளைஞர் மர்ம கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 வயது இளைஞருக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் வடக்கு மான்செஸ்டரில் Crumpsall பகுதியில் உள்ள Moss Bank சாலையில் 27 வயது இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதாக அவசர உதவி பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர், உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தற்போது கொலை வழக்கு பதிவு செய்துள்ள கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை, கருப்பு நிற உடை மற்றும் முகமூடி அணிந்த சில நபர்களால் உயிரிழந்த இளைஞர் தாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பிறகு அங்கிருந்து தப்பியோடி அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் குற்றத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.