போரிஸ் ஜான்சனின் தாமதம் தான் கூடுதலாக 27,000 பேர் பலியானதற்கு காரணம்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
பிரித்தானியாவில் லோக்டவுன் அறிவிப்பதில் போரிஸ் ஜான்சனின் அரசு தாமதம் காட்டியதால் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கூடுதலாக 27,000 பேர் பலியானதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
The Resolution Foundation ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையில் COVID-19 தொற்று பதிவாகி வரும்போது ஊரடங்கை அறிவிக்காதது அரசாங்கத்தின் மிகப்பெரிய தவறு என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் ஊரடங்கை விதிக்க தாமதம் காட்டியது தவிர்க்க முடியாத மரணங்களை ஏற்படுத்தி ஒரு பேரழிவாக மாறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 மார்ச் 9-ஆம் திகதி அன்று இத்தாலி ஊரடங்கை அறிவித்தது, ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு வாரங்கள் காத்திருந்தார்.
செப்டம்பரில், தொற்று எண்ணிக்கை அதிகரித்பொது, விஞ்ஞானிகள் உறடங்கை விதிக்க அறிவுறுத்தினர், ஆனால் ஜான்சன் போரிஸ் அரசாங்கம் அதனை புறக்கணித்தது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NEW RF report by @TorstenBell & @MikeBrewerEcon - The 12-month stretch: Where the Government has delivered – and where it has failed – during the Covid-19 crisis https://t.co/o4laUoAaC0
— Resolution Foundation (@resfoundation) March 18, 2021
இருப்பினும் அறிக்கையில், அரசு அதன் தடுப்பூசி திட்டத்திற்காக பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. டிசம்பர் 8-ஆம் திகதி மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்த முதல் நாடு பிரித்தானியா என்று அறிக்கை விவரித்தது.
பிரித்தானியா மற்ற ஐரோப்பிய நாடுகளை விட 3 மடங்கு வேகமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது, தற்போது 25 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.