சுவிஸ் நகரமொன்றில் பரவும் நோய்: 28 பேர் பாதிப்பு, ஒருவர் பலி
பாஸல் நகரில் பரவும் லீஜியோனேர்ஸ் என்னும் நோயால் 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அது என்ன நோய்?
லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ் என்னும் நோயே பாஸலில் பரவிவருகிறது.

விடயம் என்னவென்றால், மத்திய பாஸலில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டே இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது.
இந்த லீஜியோனெல்லா கிருமி, கட்டிடங்களை குளிர்விக்க பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவக்கூடும்.
ஆகவே, குறிப்பிட்ட பகுதியிலுள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூலிங் டவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அப்போது, இரண்டு அலுவலகங்களில் உள்ள கூலிங் டவர்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் இந்த லீஜியோனெல்லா கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்பட்டு அவற்றை சீரமைக்கும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஒருவர் பலி
இந்த லீஜியோனேர்ஸ் நோயால் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
காய்ச்சல், தலைவலி, சோர்வு, தசை வலி, வயிற்றுப்போக்கு, சில நேரங்களில் இருமும்போது இரத்தம் வருதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
ஒரு நல்ல விடயம் என்னவென்றால், சரியான நேரத்தில் கண்டுபிடித்துவிட்டால், இந்த நோயை ஆன்டிபயாட்டிக்குகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |