கனடாவில் 28 பல்கலைக்கழக ஊழியர்கள் கூட்டாக லொட்டரியில் வென்ற பெருந்தொகை
கனடவில் பாலிடெக்னிக் மாண்ட்ரீல் ஊழிய்ர்கள் 28 பேர் கொண்ட குழு லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில், அதை பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பல்க்லைக்கழக ஊழியர்கள் 28 பேர்
செப்டம்பர் மாதத்திற்கான Loto-Québec லொட்டரியிலேயே அந்த பல்க்லைக்கழக ஊழியர்கள் 28 பேர்களுக்கும் 5 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது.
இதனால் பரிசுத்தொகையை சரியாக பங்கிட்டு, தலா 178,570 டொலர் தொகையினை ஒவ்வொருவரும் பெற உள்ளனர். 28 பேர்களும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். தங்கள் சக ஊழியர்களுக்கு அதை பகிர்ந்தும் வருகின்றனர்.
பலரும் முதலில் நம்பவில்லை என்றும், பல முறை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த 28 பேர் கொண்ட குழுவானது 10 ஆண்டுகளுக்கு முன்னர் லொட்டரி விளையாட்டில் பங்கேற்பதற்காக உருவாக்கியுள்ளனர்.
பல முறை சிறு தொகை வென்றும் உள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக 5 மில்லியன் டொலர் பரிசாக வென்றுள்ளனர். இந்த 28 பேர்களில் சிலர் ஓய்வு பெற்றவர்களும் உள்ளனர்.
இந்த 28 பேர்களில் 15 பேர் மாண்ட்ரீல் பகுதியை சேர்ந்தவர்கள், 10 பேர் Montérégie பகுதியை சேர்ந்தவர்கள். பலரும், பணி ஓய்வுக்கு பிறகு இந்த தொகை பயன்படும் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |