ஒரே ஆண்டில் ஜேர்மனியை விட்டு வெளியேறிய 288,000 ஜேர்மானியர்கள்
ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியை விட்டு வெளியேறிய ஜேர்மானியர்கள்
ஒரே ஆண்டில் 288,000 ஜேர்மானியர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறியதாக ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

விடயம் என்னவென்றால், அவர்களில் பாதி பேர் ஜேர்மனியில் அதிக வருவாய் தரும் பணிகளில் இருந்தவர்கள்.
சமீபத்திய ஆய்வொன்றில், ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர், தாங்கள் வெளிநாடுகளில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
30 சதவிகிதம் பேர், ஏற்கனவே வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், வெளிநாட்டு அனுபவமும் அறிவும் புத்தாக்கத்துக்கும் புதிய தொழில் வாய்ப்புகளுக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பதால், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நேர்மறையான விடயமாக கருதலாம் என்று கூறும் பொருளாதார நிபுணர்கள், அதே நேரத்தில், ஒரு நாட்டிலுள்ள பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்றால், ஏதோ பிரச்சினை என்றுதான் அர்த்தம்.
ஜேர்மனியில் நிலவும் சூழல், வேலை செய்யவும், வாழவும் ஏற்றதாக இல்லை என்னும் திருப்தியின்மையின் அடையாளமே அவர்கள் வெளியேறக் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம் என்கிறார்.

விடயம் என்னவென்றால், வேலை வழங்கும் ஒரு முதலாளி, ஒரு பணியாளருக்கு 100 யூரோக்கள் செலவு செய்தால், அதில் 50.70 யூரோக்கள் மட்டுமே அந்தப் பணியாளர் கையில் கிடைக்கிறதாம்.
மீதமுள்ள தொகை, வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புகளுக்காக சென்றுவிடுகிறதாம்.
ஆக, ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர், ஜேர்மனியில் வருமானத்துடன் ஒப்பிடும்போது வரிச்சுமை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், வேலையில் காட்டும் தனிப்பட்ட அர்ப்பணிப்பு போதுமான பலனைத் தருவதில்லை என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவேதான், ஜேர்மானியர்கள் பலர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |