புளோரிடாவில் 8 வயது மாணவரை கொடூரமாக தாக்கிய ஆசிரியை
அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி மாணவரை தாக்கியதாக பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
மாணவர் மீது தாக்குதல்
அமெரிக்க மாகாணம் புளோரிடாவில் உள்ள ஒரு கிறித்துவ பாடசாலையில், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் 8 வயது மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகினார்.
அவரது உடலில் காயங்கள், கீறல்கள் மற்றும் ஒரு குத்துக்காயங்கள் இருந்ததை அவரது தாயார் கண்டுபிடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நிக்கோல் மாரி ரோட்ரிகஸ் என்ற 29 வயது ஆசிரியை சிறுவனை தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.
குழந்தை துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹயாலியாவில் உள்ள பிரைமரா இக்லேசியா ஹிஸ்பானா டி லா பிப்லியா அபியர்டா என்ற பாடசாலையில் காவலில் வைக்கப்பட்டார்.
தரையில் தள்ளிவிட்ட ஆசிரியை
குறித்த ஆசிரியை மாற்றுத் திறனாளி மாணவரை தரையில் தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது.
2024ஆம் ஆண்டு ஆகத்து மாதம், பாடசாலையில் சேர்ந்ததில் இருந்து ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புள்ள அந்த சிறுவனுக்கு ரோட்ரிகஸ்தான் 'முதன்மைப் பயிற்றுவிப்பாளாராக' இருந்து வருகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மார்ச் 4ஆம் திகதி எடுக்கப்பட்ட வகுப்பறைப் பாதுகாப்பு கமெராப் பதிவில், ஆசிரியை சிறுவனை 'ஆக்ரோஷமான முறையில்' தன்னை நோக்கிப் பிடிப்பது பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |