2 -வது கணவர் அடிக்கடி பிரச்சனை: பீர் பாட்டிலை வைத்து மனைவி எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம், சேலத்தில் இரண்டாவது கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து பிரச்சனை செய்வதால், பீர் பாட்டிலை வைத்து கழுத்தில் குத்திக் கொண்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது கணவர்
சேலம் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (32). தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர்கள் இருவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். அப்போதிலிருந்தே, சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் தான் ஜெயலட்சுமி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மகள்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
விபரீத முடிவு
இந்நிலையில், ஜெயலட்சுமி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு, வேலை செய்து வந்த தமிழழகன் (32) என்பவருடன் இவருக்கு காதல் மலர்ந்துள்ளது. இதில், தமிழழகனும் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதில், அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஜெயலட்சுமியுடன் தமிழழகன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
அதே போல நேற்று இரவும் தமிழழகன் போதையில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது, குக்கர் மூடியை வைத்து அவரை தாக்கியுள்ளார். இதனால், கோபமான கணவர், ஜெயலட்சுமியை அடித்துள்ளார்.
அப்போது, சமயலறைக்கு சென்ற ஜெயலட்சுமி அங்கிருந்த காலி பீர் பாட்டிலை வைத்து தன்னுடைய கழுத்தில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே, தகவலறிந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தமிழகனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |