ஜேர்மனியிலிருக்கும் ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக போட்டிபோடும் மூன்று நாடுகள்
ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகள் போட்டிபோடுகின்றன.
யார் அந்தப் பெண்?
Nefertiti என்னும் அந்தப் பெண் ஒரு சாதாரண பெண் அல்ல, அவள் ஒரு ராணி. அவள் ஒரு எகிப்திய ராணி. Akhenaten என்னும் எகிப்திய மன்னரின் மனைவி அவள், ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள அருங்காட்சியம் ஒன்றில் Nefertitiயின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
1924ஆம் ஆண்டு முதல், அந்த சிலை தங்கள் நாட்டிலிருக்கவேண்டும் என எகிப்து மட்டுமல்ல, பிரான்சும் கோரி வருகின்றது.
உலகிலேயே அழகான பெண் என கருதப்படும் Nefertitiயின் சிலையை, ஜேர்மன் ஆய்வாளரான Ludwig Borchardt என்பவர் கண்டுபிடித்ததால், அதை அவர் நேரடியாக ஜேர்மனிக்குக் கொண்டுவந்துவிட்டார்.
ஆனால், அவள் எகிப்து ராணி, அவளது சிலை எகிப்தில்தான் இருக்கவேண்டும் என்கிறார்கள் எகிப்து நாட்டவர்கள். Nefertiti என்றாலே அழகு என்றுதான் ஒருவகையில் பொருளாம். இன்னமும் அவளது சிலையைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவது குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |