ரொனால்டோவின் முடிவால் மெஸ்ஸிக்கு அடித்த ஜாக்பாட்! 3 சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு
கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நஸ்ர் கிளப்பிற்கு சென்றதால் அவரது மூன்று சாதனைகளை இப்போது லியோனல் மெஸ்ஸி எளிமையாக முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மெஸ்ஸி vs ரொனால்டோ போர்
அர்ஜென்டினா அட்டைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரண்டு ஜாம்பவான்களும் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக யார் என்றைக்கும் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற மேலாதிக்கத்திற்கான போரில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒருவரையொருவர் தங்கள் வரம்புகளைக் கடந்து பல சாதனைகளை முறியடித்துள்ளனர். இந்த தலைமுறையின் இரண்டு ஜாம்பவான்கள் இப்போது தங்கள் பெயர்களில் ஏராளமான கால்பந்து சாதனைகளை வைத்திருக்கிறார்கள். இருவரின் சாதனைகளை எந்த வீரரும் நெருங்கவில்லை.
Getty Images
ஆனால், இப்போது ரொனால்டோ இனி ஐரோப்பாவில் விளையாடமாட்டார் என்ற நிலையில், அவரது சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை PSG அணியின் மெஸ்ஸி பெறுவார்.
அவர் முறியடிக்க வாய்ப்புள்ள மூன்று சாதனைகளைப் பார்ப்போம்.
1, ஐரோப்பாவில் அதிக கோல்கள்
ஐரோப்பாவின் முதல் 5 லீக்குகளில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் , லா லிகாவில் ரியல் மாட்ரிட் மற்றும் சீரி ஏவில் ஜுவென்டஸ் ஆகியவற்றுடன் அவர் 696 கோல்களை அடித்துள்ளார்.
மெஸ்ஸியின் ஃபார்மில் சற்று சரிவு ஏற்பட்டதால் சமீபத்திய சீசன்களில் ரொனால்டோ அவரை முந்தினார்.
இருப்பினும், மெஸ்ஸி இப்போது ஒரு கோல் மட்டுமே ரொனால்டோவை விட பின்தங்கியிருக்கிறார். அவர் லீக் 1 தொடரில் இரண்டு கோல்களை அடித்தால் போதும் ரொனால்டோவை முந்திவிடுவார்.
Annie Leibovitz shot for Louis Vuitton
2, சாம்பியன்ஸ் லீக்கில் அதிக உதவிகள்
Assist- கோல் அடிக்கும் வீரருக்கு கடைசியாக பந்தை பாஸ் செய்வது Assist என்பார்கள்.
ரொனால்டோவுடன் ஒப்பிடும்போது ரசிகர்கள் பெரும்பாலும் மெஸ்ஸியை ஆடுகளத்தில் உதவிகளுடன் (Assists) தொடர்புபடுத்துகிறார்கள், ஆனால் UEFA சாம்பியன்ஸ் லீக்கில் அப்படி இல்லை.
ரொனால்டோ 41 உதவிகளை கொண்டுள்ளார், அதே நேரத்தில் மெஸ்ஸி 40 உதவிகளை கொண்டுள்ளார்.
சவுதி அரேபிய லீக்கில் ரொனால்டோ விளையாடாததால், இந்த ஆண்டு அவரை முந்துவதற்கான வாய்ப்பு மெஸ்சிக்கு கிடைத்துள்ளது. PSG ரவுண்ட் ஆஃப் 16-ல் பேயர்ன் முனிச்சை எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் லீக்கில் அதிக உதவிகளைப் பெற்ற வீரராக ஆவதற்கு மெஸ்ஸிக்கு இரண்டு உதவிகள் தேவை.
3, UEFA சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள்
இந்த சீசனில் UEFA சாம்பியன்ஸ் லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் எண்ணிக்கையை முறியடிப்பது லியோனல் மெஸ்சிக்கு கடினமாக உள்ளது.
35 வயதான மெஸ்ஸி ரொனால்டோவின் சாதனையை முந்துவதற்கு மேலும் 12 கோல்களை அடிக்க வேண்டும், மேலும் நாக் அவுட் கட்டங்கள் தொடங்குவதால், இந்த சாதனையை முறியடிக்கவேண்டுமானால் மிக வேகமாகவும் கோல் எணிக்கையை கூட்டவேண்டும்.
GettyImages
மெஸ்ஸி PSG-ல் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் அல்லது அடுத்த சீசனில் பார்சிலோனாவுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.