இனி அந்த கவலை வேண்டாம்.., நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற இனிப்பு வகைகள் இதோ
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாடு காரணமாக அவர்கள் பெரும்பாலும் பிடித்த உணவுகளை உண்ணமுடிவதில்லை.
பேரீச்சம்பழம், அத்திப்பழம், நட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான இனிப்புகளைக் கொடுக்கலாம்.
அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளுக்கான ஏற்ற 3 ஆரோக்கியமான இனிப்பு வகைகளை குறித்து பார்க்கலாம்.
1. மக்னா லவங்கப்பட்டை கீர்
தேவையான பொருட்கள்
- வெள்ளை மக்னா- 100g
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
- பால் - 400ml
- பாதாம் பருப்பு - 10g
- நறுக்கிய பேரீச்சம்பழம்- 1½ கப்
- அத்திப்பழம்- ½ ஸ்பூன்
- நசுக்கிய இலவங்கப்பட்டை - 1 ஸ்பூன்
செய்முறை
மக்னாவை பாதியாக நறுக்கி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சேர்த்து தீயில் சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
இதில் பால் மற்றும் நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு கிளறவும். சுமார் 1 மணி நேரம் அல்லது பால் பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
பின், பாதாம், அத்திப்பழங்களைச் சேர்க்கவும். நசுக்கிய இலவங்கப்பட்டை தூவி, அலங்கரித்து, குளிர்ச்சிசெய்து குடிக்கலாம்.
2. அன்னாசி பிஸ்கட்
தேவையான பொருட்கள்
- unsalted வெண்ணெய்- 425g
- நாட்டுச் சர்க்கரை - 230g
- கோதுமை மாவு - 550g
- நறுக்கிய அன்னாசிப்பழம்- 100g
செய்முறை
வெண்ணெய் மற்றும் சர்க்கரையை பஞ்சுபோன்ற நிறம் வரும் வரை நன்கு கலக்கவும்.
பின், கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் நறுக்கிய அன்னாசிப்பழம் ஆகியவற்றைப் சேர்த்து பிஸ்கட்டைப் போல் மடிக்கவும்.
1-4ºC வெப்பநிலையில் 60 நிமிடங்கள் வைக்கவும்.அதன்பின் 180º சென்டிகிரேடில் 15-20 நிமிடங்கள் சுடவும். பின் அதை குளிர வைத்தால் சுவையான பிஸ்கட் தயார்.
3. ஜீரா பிஸ்கட்
தேவையான பொருட்கள்
- unsalted வெண்ணெய்- 425g
- நாட்டுச் சர்க்கரை - 230g
- கோதுமை மாவு - 550g
- உப்பு - 5g
- சீரகம்- 5g
செய்முறை
வெண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலக்கவும். பின் கோதுமை மாவு மற்றும் உப்பினைக் சேர்த்து கலக்கவும். பின் சீரகத்தை லேசாக வறுத்து, கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு போட்டு கிளறவும்.
வெண்ணெயை வைத்து மாவினை படிப்படியாக கலக்கவும்.
1-4ºC வெப்பநிலையில் 60 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின், அடுப்பை 180º சென்டிகிரேடுக்கு சூடாக்கவும்.
பின் பிஸ்கட் கலவையை உருட்டி விரும்பிய வடிவத்தில் வெட்டவும். 180º சென்டிகிரேடில் 15-20 நிமிடங்கள் சுடவும். ஆற வைத்து, காற்று புகாத கலனில் சேமித்து வைத்து உண்ணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |