உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் 3 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
உடலில் நாம் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றின் மூலம் நச்சுக்கள் தேங்குகின்றன.
இப்படி உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கும் போது, உறுப்புக்களின் செயல்பாடு குறைவதோடு, உடலின் மெட்டபாலிச செயல்பாடுகளிலும் இடையூறை ஏற்படுத்தும்.
உடலில் நச்சுக்கள் அதிகரித்தால் மூளை மந்தம், நாள்பட்ட உடல் சோர்வு, செரிமான பிரச்சனைகள், சரும அழற்சி, உறுப்புக்களில் அழுத்தம் அதிகரிக்கும்.
அந்தவகையில், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் 3 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
1. நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமம், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். மேலும், உடலில் உள்ள கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

2. சுண்டக்காய்
வாரம் ஒருமுறை சுண்டக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றவும், அல்சர் பிரச்சனையை குறைக்கவும் உதவும்.
இதில் அதிகமாக உள்ள இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கும் நல்லது.

3. அகத்திக்கீரை
அகத்திக்கீரையை மாதம் ஒருமுறை சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற உதவும்.
மேலும் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |