பிரான்ஸில் கறுப்பின இசையமைப்பாளர் மீது தாக்குதல்: மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை
3 French police officers jailed for racial attack: கறுப்பின இசையமைப்பாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி கொரோனா தொற்றின் போது பாரிஸில் உள்ள 47 வயது கறுப்பின இசையமைப்பாளர் மைக்கேல் ஜெக்லரின்(Michel Zecler) ஸ்டுடியோவிற்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறை அதிகாரிகள் இசையமைப்பாளர் கடுமையாக தாக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், இசையமைப்பாளரை தாக்கிய 3 காவல்துறை அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இனவெறி இருந்து இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டாய முகக்கவசம் அணியாத காரணத்தினாலும், தங்களுடைய ஆயுதத்தை பறிக்க முயன்றதாலும் தான் அவரை தாக்க நேரிட்டதாக காவல்துறை தரப்பு வாதிட்டது.
அத்துடன் தாங்கள் எந்தவொரு இனவெறி வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை என்றும் காவலர்கள் தரப்பு மறுத்தது.
இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள Aurelien Lapersonne, Philippe Tondeux மற்றும் Pierre Plantier ஆகிய மூன்று காவலர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.