60,000 உயிர்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டன! பிரித்தானியா சுகாதாரத்துறை தகவல்
பிரித்தானியாவில் 75 சதவீதம் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு இதுவரை 86,780,455 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 89 சதவீதம் மக்களுக்கு (39,688,566) குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.
அதேபோல், 75 சதவீதம் மக்களுக்கு (47,091,889) முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்களும்) போடப்பட்டுவிட்டது. ஆக, பிரித்தானியாவில் 4-ல் 3 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர்.
இதன்மூலம் அங்கு 22 மில்லியன் பேர் தொற்று பரவலில் இருந்தும், 66,900 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் இருந்தும், 60,000 பேர் வரையில் மரணத்தில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர் என அந்த நாட்டின் பொது சுகாதாரத்துறை (Public Health England) தெரிவித்துள்ளது.