பிரித்தானிய பிரதமர் பதவி விலக வேண்டும்: கருத்துக்கணிப்பு முடிவுகளால் பரபரப்பு!
பார்ட்டிகேட் தொடர்பான அறிக்கைகள் இன்று வெளியானதை தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என ஐந்தில் மூன்று பிரித்தானியர்கள் விரும்புவதாக YouGov நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட பொதுமுடக்க கட்டுபாடுகளை மீறி பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.
மேலும் அது தொடர்பான விசாரணையை பிரித்தானிய சிவில் அதிகாரி Sue Gray தீவிரமாக நடத்தி வந்த நிலையில், கொரோனா அத்துமீறல் தொடர்பான தனது முழுஅறிக்கையையும் Sue Gray இன்று சமர்ப்பித்துள்ளார்.
அதில் பொதுமுடக்கத்தின் போது பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது மனைவி கேரி மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலானோர் கையில் மதுபானக் கோப்பைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.
இந்தநிலையில், பார்ட்டிகேட் அறிக்கைகள் தொடர்பாக YouGov நடத்திய கருத்துக்கணிப்பில், ஐந்தில் மூன்று பிரித்தானியர்கள், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என விரும்புவதாக தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 100 சதவிகித பங்கேற்பாளர்களில் 59 சதவிகித பங்கேற்பாளர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதிவி விலக வேண்டும் என விரும்பிவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 2019 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்த 29 சதவிகித ஆதரவாளர்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என விரும்பிவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 2019 தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக இருந்த 88 சதவிகித வாக்காளர்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என விரும்பிவதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆயுள் தண்டனை முடிந்தாலும் விடுதலையாக முடியாது., ஜேர்மன் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை
பார்ட்டிகேட் தொடர்பான இந்த கருத்துக்கணிப்புகள் சுமார் 2,748 பேர்களிடம் இருந்து பெறப்பட்டது என்ற தகவலையும் YouGov வெளியிட்டுள்ளது.