தமிழர் ஒருவர் உட்பட iPhone 16 தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய 3 இந்திய பொறியாளர்கள்!
Apple நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய iPhone 16 சீரிஸ் ஸ்மார்ட்போனை சில அற்புதமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக AI மற்றும் Camera தொழில்நுட்பத்தில் புதிய அம்சங்களை கொண்டுவந்துள்ளது.
இந்த ஐபோன் தயாரிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
தயாரிப்பு மேலாளர் (product manager) பியூஷ் பிரதீக் (Piyush Pratik), கேமரா வன்பொருள் பொறியியல் மேலாளர் பாலோம் ஷா (Paulom Shah) மற்றும் சிலிக்கான் இன்ஜினியரிங் குழுமத்தின் துணைத் தலைவர் ஸ்ரீபாலன் சந்தானம் (Sribalan Santhanam) ஆகியோர் ஐபோன் 16 உற்பத்தியில் அதன் தொடக்கத்திலிருந்து ஈடுபட்டுள்ளனர்.
iPhone-களின் அதிநவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இவர்கள் மூவரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பியூஷ் பிரதீக்
பியூஷ் பிரதீக் ஐபோன் 16 தொடரில் மேம்பட்ட கமெரா கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த போனில் பிரத்யேக Camera Control Button உள்ளது.
இந்த பொத்தானை ஒருமுறை அழுத்தினால் புகைப்படத்தை எடுக்கும். பொத்தானை இரண்டு முறை அழுத்தினால் modes அல்லது settingsக்கு இடையில் மாறலாம். இந்த அம்சத்தின் பின்னணியில் முக்கிய பங்கு வகித்த பிரதீக், IIT Delhi-யில் தங்கப் பதக்கம் வென்றவர்.
பாலோம் ஷா
பாலோம் ஷா ஆப்பிள் நிறுவனத்தில் கேமரா வடிவமைப்பு பயிற்சியாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் ஐஃபோனின் Wide மற்றும் Telephoto Camera வடிவமைப்பை மேற்பார்வையிடும் குழுவின் தலைவரானார்.
இவர் தற்போது Camera Hardware Engineering Manager-ராக உள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, ஷா Blackberry மற்றும் Litro (கூகிளின் ஒரு பகுதி) ஆகியவற்றில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் பொறியியலில் பட்டம் பெற்றார்.
ஸ்ரீபாலன் சந்தானம்
ஆப்பிளின் A-series processors உருவாக்கும் குழுவை சந்தானம் தற்போது வழிநடத்துகிறார். 2008-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சிப் தயாரிப்பாளரான PACM-ஐ கையகப்படுத்தியபோது அவர் அதில் சேர்ந்தார். PACM-ன் தொழில்நுட்பம் ஐபோனின் செயலியில் பயன்படுத்தப்படுகிறது.
PACM டிசைன் இன்ஜினியரிங் பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர் சந்தானம். அவர் 1990 முதல் குறைக்கடத்தி துறையில் தொடர்புடையவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
[NE2I8ZH ]
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple iPhone 16 Launch, three Indian origin engineers, Piyush Pratik, Paulom Shah, Sribalan Santhanam, iPhone 16 camera control button, Apple Intelligence