டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என முன்னாள் இந்திய வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு வீரர்களும் தங்கள் அணியில் இடம் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் இந்திய அணியும் தற்போதைய தொடர்களின் மூலம் எந்தெந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற உள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து விவாதித்த முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 3 வீரர்களும் 15 வீரர்களை கொண்ட உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள் எனக் கூறியுள்ளனர். இதன் காரணமாக இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக மாறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.