சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி
Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் மூன்று இந்திய இளைஞர்கள்.
சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும், சில மாதங்களுக்கு முன்புதான் உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

படித்துக்கொண்டே மூவரும் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள் மூவரும்.
அப்போது, அவர்கள் பயணித்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி, மரம் ஒன்றில் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் என்னும் மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில், அது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |