ஜேர்மனியில் கேரளாவைச் சேர்ந்து மூன்று பேருக்கு நேர்ந்த துயரம்: ஒருவர் கைது
Three Keralites killed in Germany apartment fire: ஜேர்மனியிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஜேர்மனியில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், மூன்று பேர் கொல்லப்பட்டார்கள், ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
கேரளாவைச் சேர்ந்து மூன்று பேருக்கு நேர்ந்த துயரம்
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணியளவில், மேற்கு ஜேர்மனியிலுள்ள Bochum என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, புகையால் மூர்ச்சையடைந்திருந்த ஐந்து பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதே நேரத்தில், மேலும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மூன்று பேரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லம் என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சலி ஷீலா ஜாய், எர்ணாகுளம் என்னுமிடத்தைச் சேர்ந்த சிவின் ஜானி மற்றும் இடுக்கி என்னுமிடத்தைச் சேர்ந்த நோவா சாபு என்பவர்களே உயிரிழந்துள்ளார்கள்.
ஒருவர் கைது
இதற்கிடையில், அந்த குடியிருப்புக்கு வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ரொமேனியா நாட்டவரான 41 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.