4 -ம் வகுப்பு வரை படித்த டிரைவர்: டீ விற்று மாத வருமானம் 3 லட்சம்.. யார் இந்த நபர்?
வெறும் 4 -ம் வகுப்பு படித்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் மாதம் 3 லட்சம் வரை சம்பாதிக்கும் நபரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
பெங்களூருவில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தில் பிறந்தவர் முனுசாமி டேனியல். இவர், தனது பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறாமல் இருந்ததால் 4 -ம் வகுப்பிலேயே பள்ளி படிப்பை நிறுத்தினார்.
பின்பு, தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக 10 வயதில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்தார். ஆனால், இதில் எந்த வேலையும் அவருக்கு மனநிறைவு தரவில்லை. இதனைத்தொடர்ந்து டிரைவர் தொழிலில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார். இதிலும், டேனியலுக்கு மனநிறைவு அளிக்கவில்லை.
இதன் பின்னர், கடந்த 2007 -ம் ஆண்டு டீ பிசினஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தார். இந்த தொழிலில் எந்தவொரு அனுபவமும் இல்லாமல் இருந்தாலும் அர்ப்பணிப்புடன் இதனை தொடங்கினார்.
அதற்காக காலை 4 மணிக்கே எழுந்து டீக்கடையை திறந்து டீ விற்பனை செய்து சிறிய அளவில் வருமானத்தை பெற்று வந்தார். இப்படி சில மாதங்கள் சென்றன.
ஷேரோன் டீ ஸ்டால்
வாழ்க்கையில் நாம் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் நிச்சயம் போராட்டம் இருக்கும். அதன் முடிவில், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அப்படி தான் முனுசாமி டேனியலுக்கும் கிடைத்தது. இவர், ஷேரோன் டீ ஸ்டாலை வெற்றிகரமான டீ நிலையமாக மாற்றினார்.
இங்கு, பல ரெகுலர் கஸ்டமர்கள் வர ஆரம்பித்தனர். இதனால், பல வெரைட்டிகளில் டீ விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிரபலமாகி, டேனியலின் கடை பெங்களூருவில் ஒரு முக்கியமான கடையாக மாறியுள்ளது.
இவரது கடையில், தினமும் 1000 -க்கும் அதிகமான எண்ணிக்கையிலான டீ கப்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவர், 100 -க்கும் அதிகமான வெரைட்டிகளில் டீ விற்பனை செய்து வருகிறார்.
பெங்களூருவில் மட்டுமே மூன்று கிளைகள் திறந்துள்ளார். இதனால், டேனியலுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுகிறார்.
அதுமட்டுமல்லாமல், இவரது கடையில் 30 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு டேனியலின் வெற்றி உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |