சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த 3 இலைகள் போதும்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் 3 இலைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கற்றாழை
கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமான செடியாகும்.
அமெரிக்காவில் உள்ள NCBI (National Center for Biotechnology Information ) ஆய்வின்படி கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதாகவும், இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
கற்றாழைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தும்.
சீதாப்பழ இலை
NCBI-ன் ஆய்வின் படி சீதாப்பழ இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
சீதாப்பழ இலைகள் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன் இரத்த சர்க்கரையையும் குறைக்கிறது.
வேப்பிலை
வேப்பிலை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்று NCBI-யின் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
கணையம் தன் வேலையைச் சரியாக செய்யும் .இதன் காரணமாக இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த இலைகளை சாப்பிடுவதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணருடன் ஆலோசனை செய்யவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |