பிரித்தானியாவில் 27 வயது கொலை செய்யப்பட்ட விவகாரம்: 3 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு
வடக்கு மான்செஸ்டரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 27 வயது கொலை செய்யப்பட்ட விவகாரம்
பிரித்தானியாவின் வடக்கு மான்செஸ்டர் பகுதியில் உள்ள கிரம்ப்சால்(Crumpsall) பகுதியில் உள்ள மோஸ் பேங்க் நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்கள் மூன்று பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Cheetham Hill பகுதியில் உள்ள Galsworthy Avenue-வை சேர்ந்த ஹம்சா நதீம்(25) மற்றும் ஹைதர் நதீம்(24) ஆகிய இருவரும். Salford பகுதியில் Kiwi சாலையை சேர்ந்த பிரெண்டன் விண்டர்(26) ஆகியோர் மீது இந்த கொலை குற்றச்சாட்டானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹம்சா நதீம் மற்றும் பிரெண்டன் வின்டர் ஆகிய இருவர் மீது கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
மூவரும் மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மூவரும் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் முன்னதாக கைது செய்யப்பட்ட 33 மற்றும் 35 வயதுடைய 2 ஆண்கள் மற்றும் 21 வயது மற்றும் 34 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.