லண்டனில் முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! படுகாயத்துடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..
கிழக்கு லண்டனில் முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், லண்டனின் நியூஹாம் பகுதியில் Upton Lane-ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு துணை மருத்டுவர்களுடன் விரைந்து வந்த மெட்ரோபொலிட்டன் பொலிஸார், அங்கு குண்டடி பட்டு கிடந்த 3 பேர் மற்றும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவரையும் மீட்டனர்.
Credit: UkNewsinPictures
அவர்கள் கிழக்கு லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இதுவரை அவர்களின் நிலை தெரியவில்லை.
அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதமாக கருதப்படாத இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்ற சம்பவம் நடந்த இடம் அப்படியே உள்ளது என்றும் மெட் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரை பிடிப்பதற்காக, நியூஹாம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை அதிகாரிகளுக்கு அதிக நிறுத்த மற்றும் தேடல் அதிகாரங்களை வழங்கும் Section 60 உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சம்பவம் தொடர்பாகவும், சந்தேகநபர் குறித்தும் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
BREAKING NEWS.
— Stan VoW (@Stan_VoWales) October 8, 2021
3 shot at hairdressers on Upton lane, London. pic.twitter.com/6KMfWbPvV1
#UPDATE | Police were called at 18:59hrs to reports of a shooting in Upton Lane, E7. Three men were found with gunshot injuries and taken to hospital. We await an update on their conditions. No arrests at this early stage. Any witnesses please call 101 quoting CAD 6941/08Oct.
— Newham MPS | North East BCU (@MPSNewham) October 8, 2021
Upcoming Potos Credit: UkNewsinPictures



