பிரான்ஸ் கடற்கரையில் புலம்பெயர் மக்கள் மூவர் உயிரிழப்பு., 50 பேர் மீட்பு
பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற நிலையில், பிரான்சின் கலே கடற்கரைக்கு அருகே புலம்பெயர் மக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sangatte நகரின் மேயர் கீ அலமான் இந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன், 7 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் சிகிச்சைக்காக சங்காத்தே நகரில் உள்ள ஒரு மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
படகின் அதிக சுமை காரணமாக பலர் கடலில் விழுந்தனர். இது தொடர்பான மீட்பு முயற்சியில் பிரஞ்சு கடற்படை மற்றும் தீயணைப்பு துறை இணைந்தனர்.
2024-ஆம் ஆண்டில் மொத்தம் 35,491 பேர் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அரசு, புலம்பெயர் மக்கள் படகில் எல்லையைக் கடக்கும் ஆபத்தான நடவடிக்கைகளை கண்டித்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் புதிய துறைமுக பாதுகாப்பு கட்டளை அமைப்பை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France U, UK France, Migrants