பிரான்சின் சில பகுதிகளை துவம்சம் செய்த புயல்: மூன்று பேர் பலி
தென்கிழக்கு பிரான்சை புயல் துவம்சம் செய்த நிலையில், பெருவெள்ளம் காரணமாக மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், இரண்டுபேரைக் காணவில்லை.
தென்கிழக்கு பிரான்சை புயல் துவம்சம் செய்த புயல்
தென்கிழக்கு பிரான்சின் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 250 மில்லிமிற்றர் மழை பெய்துள்ளது.
Le Lavandou பகுதி மேயரான Gil Bernardi கூறும்போது, சாலைகள், பாலங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.
சுமார் 200 தீயணைப்புவீரர்களும் 35 பொலிசாரும் Var பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒரு முதிய தம்பதி காரில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களுடைய கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டார்கள்.
அதேபோல, மற்றொரு நபரும் தனது காருடன் மூழ்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |