பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கொல்லப்பட்ட 3 பேர்: பதின்பருவ இளைஞர் அதிரடி கைது
பிரித்தானியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய டீன் ஏஜ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பயங்கரம்
பிரித்தானியாவின் Luton பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 பேர் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய டீன் ஏஜ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை off Wauluds Bank Drive-வின் Leabank-இல் உள்ள சொத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டு இருப்பதாக Bedfordshire பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களின் நலன் குறித்து வந்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்து 3 பேரை கண்டுபிடித்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 வயது டீன் ஏஜ் சிறுவன் கைது
இந்நிலையில், இந்த குற்றச் சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 18 வயது டீன்ஏஜ் சிறுவன் ஒருவர் பர்மிங்ஹாம் சாலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பர்மிங்ஹாம் சாலையில் இருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக Bedfordshire பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவரை ஒருவர் முன் தெரிந்தவர்கள் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விவரம் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |