கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள்: மூன்றாவது நபர் பலி
கனடாவில் பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்தார்கள். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
கனடாவின் நான்கு மாகாணங்களில் பானம் ஒன்றில் கிருமிகள் கண்டுபிடிப்பு
கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய நான்கு மாகாணங்களில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பானம் ஒன்றில் லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Pickering என்னும் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட பானத்தில் இந்த கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
Silk என்னு பிராண்ட் பெயர் கொண்ட almond milk, coconut milk, almond-coconut milk and oat milk மற்றும் Great Value பிராண்டின் almond milk ஆகிய பானங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பானத்தை அருந்திய 2 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மூன்றவாதாக ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |