பிரான்சில் பனிச்சரிவில் சிக்கிய மூவருக்கு நேர்ந்த துயர முடிவு
பிரான்சில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
பனிச்சரிவில் சிக்கிய மூவருக்கு நேர்ந்த துயர முடிவு
பிரான்சிலுள்ள Val d’Isere என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பனிச்சறுக்கு விளையாட ஐந்து பேர் கொண்ட ஒரு குழு ஒரு வழிகாட்டியுடன் சென்றுள்ளது.

நேற்று அவர்கள் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கும்போது, திடீரென பனிச்சரிவு ஏற்படுள்ளது.
அவர்கள் ஆறு பேரும் பனியில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டுபேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் பிரித்தானியர்கள்.
அத்துடன், உயரமான மலை ஒன்றின் சரிவில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
அவர் பிரான்ஸ் நாட்டவர் ஆவார். அந்த மூன்று பேரின் உயிரிழப்பு தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |