ஒரே மாதத்தில் ரூ 650 கோடியை அள்ளிய பெண்மணி... பல மடங்கு லாபம் கொடுத்த அந்த 3 பங்குகள்
பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா காட்டில் இந்த ஆண்டு பணமழை கொட்டியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது..
தாறுமாறான லாபம்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமான நிலையில், அவரின் பங்கு போர்ட்ஃபோலியோ தற்போது அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் உள்ளது.
2023ல் வெறும் 3 பங்குகளில் இருந்து ரேகாவுக்கு தாறுமாறான லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, ரேகா ஜுன்ஜுன்வாலா போர்ட்ஃபோலியோவில் 25 பங்குகள் உள்ளன.
இந்த போர்ட்ஃபோலியோ 2023ல் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளது. போர்ட்ஃபோலியோ மதிப்பு தோராயமாக இந்திய மதிப்பில் ரூ 39,000 கோடி என உயர்ந்துள்ளது. மட்டுமின்றி, ரேகாவின் போர்ட்ஃபோலியோவில் தங்க முட்டையிடும் வாத்து என கருதப்படுவது Titan பங்கு தான்.
2023ல் டைட்டன் பங்கு விலை சுமார் 39 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. டைட்டன் நிறுவனத்தில் ரேகாவுக்கு 5.4 சதவிகித பங்கு இருக்கிறது. ரேகாவிடம் உள்ள டைட்டன் பங்குகளின் மதிப்பு ரூ 17,000 கோடியைத் தாண்டியுள்ளது.
சுமார் 50 சதவிகிதம் மேல்
மட்டுமின்றி, இந்த ஆண்டில் ரேகாவுக்கு அட்டகாசமான லாபத்தை அள்ளிக் கொடுத்தது Tata Motors DVR பங்கு என்றே கூறப்படுகிறது. 2023ல் மட்டும் இந்த பங்கு 138 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
நேரடியாக Tata Motors நிறுவனத்திலும் ரேகாவுக்கு 1.6 சதவிகித பங்கு இருக்கிறது. 2023ல் டாடா மோட்டார்ஸ் 88 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. தற்போது ரேகாவிடம் உள்ள டாடா மோட்டார்ஸ் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ 3,800 கோடி.
மட்டுமின்றி DB Realty நிறுவனத்தில் ரேகாவுக்கு 2 சதவிகித பங்கு இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் டி.பி ரியல்டி பங்கு 108 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ரேகா ஜுன்ஜுன்வாலா போர்ட்ஃபோலியோவில் உள்ள பல்வேறு பங்குகள் 2023ல் சுமார் 50 சதவிகிதம் மேல் உயர்ந்திருக்கின்றன.
VA Tech Wabag: 95%, Wockhardt: 88%, Geojit Financial: 70%, Nazara Technologies: 53%, Karur Vysya Bank: 51%, Metro Brands: 49%. மொத்தமாக 3 பங்குகளில் இருந்து ஒரே மாதத்தில் சுமார் ரூ 650 கோடியை ரேகா சம்பாதித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |