ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம்., ரயில் மோதி நொறுங்கியதால் பலி எண்ணிக்கை அச்சம்
தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் மோதி கோர விபத்து
தமிழக மாவட்டமான கடலூர், செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது பள்ளி வாகனம் மீது ரயில் மோதியுள்ளது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற அதிவிரைவு ரயிலானது வேனின் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் தனியார் பள்ளி வேன் உருக்குலைந்த துயர காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீட்பு பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரயில் வரும் போது ரயில்வே கேட் திறந்து இருந்தது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |