இரத்த அழுத்தத்தை எச்சரிக்கும் முக்கிய மூன்று அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக (140/90 mmHg அல்லது அதற்கு மேல்) இருப்பது.
உணவில் உள்ள அதிக உப்பு மற்றும் சோடியம் உடலில் நீரைத் தேக்கி, இரத்த அளவை அதிகரித்து அழுத்தத்தை உயர்த்தும்.
அந்தவகையில், உடலில் இரத்த அழுத்தம் இருப்பதை எச்சரிக்கும் முக்கிய மூன்று அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன தெரியுமா?
1. காலை நேர தலைவலி- அதிகாலையில் ஏற்படும் தலைவலியானது அதிக மன அழுத்தம் அல்லது போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் சந்திக்க நேரிடும். அதிகாலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, மண்டை ஓட்டில் அழுத்தம் அதிகரிக்கிறது.
2. பார்வையில் மாற்றங்கள்- பார்வையில் ஏற்படும் மாற்றங்களும் உயர் இரத்த அழுத்தத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாகும். ஏனெனில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அது கண்களில் உள்ள சிறிய இரத்த குழாய்களை கடினப்படுத்தி, உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியின் நிலைக்கு உள்ளாக்குகிறது.
3. உடல் சோர்வு- உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை மற்றும் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காமல் இருக்கும். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |