பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட 3 பெண்கள்: அடையாளம் கண்டுபிடித்த காவல்துறை
பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட 3 பெண்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்கள்
பிரித்தானியாவின் பிரைட்டன் கடற்கரையின் ஆங்கில கால்வாய் பகுதியில் 3 பெண்களின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை(மே 13ம் திகதி) அதிகாலை 5.45 மணிக்கு மூன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப்பெரிய தேடுதல் வேட்டையை சசெக்ஸ் காவல்துறையினர் முன்னெடுத்தனர்.
அவர்கள் மூவரும் கடலுக்குள் சென்றார்களா என்ற கோணத்திலும் அல்லது வேறு யாரும் அவர்களை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் கண்டுபிடித்த காவல்துறை
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 3 பெண்களையும் அடையாளம் கண்டு இருப்பதாக சசெக்ஸ் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அடையாளம் காணும் நடைமுறைகள் இன்னும் முடிவடையாததால் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் மற்ற விவரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
உயிரிழந்த மூன்று பெண்களும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்ட நடைமுறைகள் முழுமையாக முடிவடையும் வரை பெண்களின் பெயரை வெளியிட போவது இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |