3 ஆண்டுகளாக மரத்துடன் வாழ்ந்து வரும் பிரித்தானிய பெண்! வியக்க வைக்கும் காரணம்?
பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Merseyside பகுதியில் வசித்து வருபவர் Kate Cunningham. 37 வயது மதிக்கத்தக்க இந்த பெண்மணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மரத்தை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு இவர் தனது இரண்டாவது பெயரான குடும்பப் பெயரை எல்டர் என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வாரத்திற்கு ஐந்து முறை எல்டர் மரத்தை பார்க்க சென்று விடுவதாக கூறப்படுகிறது. இவர் ஒரு இயற்கை ஆர்வலர் ஆவார்.
Rimrose பள்ளத்தாக்கில் உள்ள Country Park வழியாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அந்த பெண் ஒரு பேட்டியில் கூறியதாவது, இப்போது எங்களின் மூன்றாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்றாக கொண்டாட உள்ளோம். அதனால் அதற்கு அலங்காரங்களை செய்வதை பாரம்பரியமாக உணர்கிறேன்.
அலங்காரங்களை செய்ததால் பிரகாசமான டிசம்பர் வெயிலில் எனது மரம் எப்போதும் போல என்னை கவர்ந்துவிட்டது. தனது திருமணத்திற்கு குடும்பத்தினரும், நண்பர்களும் முழுமையாக ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.